Friday, October 28, 2011

இணையதளம்




உலகின் ஏதோவொரு மூலையில் உள்ளவரை
குறுகுறுவென்று உற்றுப் பார்க்கலாம்
அருகில் உள்ளவர்களை அந்நியமாக்கி
சேமித்த நொடிகளில், நிமிடங்களில், நாட்களில்.....

புத்தாண்டு

காலத்தின் தடையற்ற ஓட்டம்
அதை கூறிட்டுப் பதியும் கூட்டம்
ஒரு கூறின் முதல்நாளாம் இந்நாளில்
வாழ்த்துகிறேன் உன் வாழ்வில் ஏற்றம்!

அம்மா

உனக்குள் நான் உயிர் அணுவாய்
உன் அணுக்கள் என் உணவாய்
உருவாகி நிற்கின்றேன் இன்று
இயற்கை அழித்திடும் ஒருநாள் நம்மை
அழியாது நம் உறவு காலம் மரிக்கும்வரை

கடவுள்

புரிய முனைந்தால் எட்டப் போவான்
கட்டி அணைத்தால் சிலிர்க்கச் செய்வான்
ஏற்க மறுத்தால் சீண்ட மாட்டான்
கடவுள் மனிதனின் கற்பனையோ?
கற்பனைக்கு அடங்கா அதிபதியோ?