Friday, September 23, 2011

விவரம் மிக முக்கியம் கண்ணா!

Steve Jobs உடனான  தன் அனுபவம் பற்றி Vic Gundotra தனது G+ பக்கம் வழியாக பகிர்ந்துகொண்டதின் தமிழாக்கம்.

ஜனவரி 6 2008  மத சடங்குகளில் இடூபட்டிருக்கும் பொழுது மறைக்கபட்ட தொலைபேசி எண்ணில் இருந்து ஓர் அழைப்பு வந்தது. சடங்குகளில் மும்முரமாக இருந்ததாலும் அறிவிப்பில்லாத எண்ணாக இருந்ததாலும் அழைப்பை ஏற்க முனையவில்லை.

பிறகு வீடிற்கு செல்வதற்காக குடும்பத்தினருடன் வாகனத்தை நோக்கி செல்கையில் Steve Jobs இன்  "Vic, அவசர செய்தி ஒன்று இருக்கிறது, என் வீட்டு எண்னை அழைக்க முடியுமா" என்ற SMS. 

Google இன் mobile apps அனைத்துக்கும் மேற்பார்வையாளன் என்ற பொறுப்பின் பல சிறப்புகளில் ஒன்று Steve Jobs போன்றவர்களிடம் அடிக்கடி பேசிக்கொள்ளும் வாய்ப்பு. 

"Steve, Vic பேசுறேன். மன்னிக்கவும். வழிபாட்டில் இருந்தேன், மற்றும் உங்களது தொலைபேசி எண் காட்டப்படவில்லை, அதனால்தான் பேச முனையவில்லை"

சிரித்துகொண்டே "Vic, வழிபாட்டின் போது கடவுள் அழைப்பை தவிர மற்றவற்றை ஏற்க வேண்டியதில்லை." 

இந்த மனிதன் காரணமில்லாமல் அழைக்க மாட்டரே. இப்ப என்ன பிரச்சனையோ என்ற எண்ணம் மனதில் ஓட, பதட்ற்றதுடன் சிரித்துகொண்டு கவனித்தேன்.

"Vic, ஒரு முக்கியமான உடனே கவனிக்க வேண்டிய விடயம். iPhone இல் உள்ள Google app இன் முகப்பு தோற்றத்தின் இரண்டாவது ௦ மீதான மஞ்சள் நிறம் சரியாக இல்லை. இதை உங்களுடன் சேர்ந்து நாளையே சரி செய்ய Greg ய் நியமிக்கிறேன். உங்களுக்கு இதில் உடன்பாடுதானே?"

நிச்சயமாக.

சில நிமிடங்களில் இதே விடயம் "Icon Ambulance" என்ற தலைப்பில் மின் அஞ்சலாக வந்தடைந்தது.

சிறு வயதில் இருந்தே Apple II முதலான பல்வேறு தயாரிப்புகளின் மீதான என் காதல், Microsoft நிறுவனத்தில் வேலை பார்த்த 15 ஆண்டுகளிலும் கூட மாறவில்லை. என் வாழ்வில் ஒரு அங்கமான Apple தயாரிப்புகள், மற்றும் Steve Jobs இன் மீது மிகுந்த அபிமானம் கொன்றிருன்தேன். 

இன்றும் கூட தலைமைத்துவம், லட்சியம் போன்ற விடயங்களை பற்றி சிந்திக்கும் பொழுது Steve Jobs இடம் இருந்து வார விடுமுறை நாளில வந்த இந்த தொலைபேசி அழைப்பு நினைவுக்கு வரும்.

CEO -க்கள் இப்படிதான் இருக்க வேண்டும். சிறிய விடயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க  கூடியவர்களாக. அது வண்ணமாக இருந்தாலும் சரி.

நான் சந்திக்க நேர்ந்த பெருந் தலைவர்களில் ஒருவரான Steve க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

குறிப்பு : இது Steve Jobs Apple இன் CEO பொறுப்பில் இருந்து  விடைபெற்றுகொண்ட சில நாட்களில் அவர் பற்றி வெளியான பல செய்திகளில் பிரபலமான ஒன்று. 






No comments:

Post a Comment